
சுயவிவரம்
அறிமுகம்
வே. செந்தில் பாலாஜி (பிறப்பு: 21 அக்டோபர் 1975) ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு அரசு முன்னாள் அமைச்சருமானவர். தற்போது, கரூர் தொகுதியை சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) பணியாற்றி வருகிறார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கரூர் மாவட்டச் செயலாளர் பதவியையும் வகிக்கிறார்.
அவரது அரசியல் பயணத்தின் போது, மின்சாரம், மதுவிலக்கு,கலால் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். நிர்வாகத் திறனுக்கும், தலைமைத்துவத்துக்கும், மக்களை முன்னிறுத்திய ஆட்சிக் கொள்கைக்கும் அவர் பரவலாக அறியப்படுகிறவர். அடிப்படை மட்டத்தில் வலுவான தொடர்பு மற்றும் தலைமைத்துவத்தின் மூலம், கொங்குமண்டலத்தில் திமுக கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதிலும், தனது தொகுதியில் நிலையான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கத் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிக்கிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் சமூகப் பின்னணியும்
1975 அக்டோபர் 21, கரூர் மாவட்டம் இராமேஸ்வரபட்டியில் பிறந்த வே. செந்தில்பாலாஜி, சாதாரணக் குடும்பத்தில் இருந்து உருவெடுத்தார். சிறுவயதிலேயே அரசியலில் காலடி வைத்த அவர், பொதுசேவையை வாழ்வின் இலக்காக ஏற்றார்.
கிராம மக்கள் நலன், மற்றும் உயர்வு, ஆகியவை அவரின் அரசியல் பயணத்தை வரையறுத்தன. எளிமையான அணுகுமுறை, தரைமட்ட செயல்பாடு, மற்றும் மக்கள் மத்தியில் நிலையான தொடர்பு ஆகியவை, அவரை நம்பிக்கைக்குரிய தலைவராக உயர்த்தின.
அரசியல் பயணம்
திரு. வே. செந்தில்பாலாஜி, தனது அரசியல் பயணத்தை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க)-இல் தொடங்கி, 2006-ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக (MLA) தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2011-ல் மீண்டும் வெற்றி பெற்று, அதே ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில், தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்தார்.
2018-இல், அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க) இணைய, கரூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த நிலையிலிருந்து, தரையணைத்த அரசியல் இயக்கம், கட்சி வலுப்படுத்தல், மற்றும் தேர்தல் திட்டமிடல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தார்.
2019 இடைத்தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் அவர் மீண்டும் MLA ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
2021 முதல் 2023 வரை, அவர் தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் கலால் பணியாற்றினார். இந்த காலப்பகுதியில், மின் உள்கட்டமைப்பு மேம்பாடு, மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்கள்,போன்ற முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார், மாநிலத்தின் ஆற்றல் வளத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்தார்.
இந்த அரசியல் பயணம், அவரது திறமை, தொண்டாற்றும் மனப்பாங்கு, மற்றும் திட்டமிடும்நேர்த்தி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
தற்போதைய பொறுப்புகள்
- மாநில சட்டமன்ற உறுப்பினர் – கரூர் (திமுக), 2021 –தற்போது வரை
- மாவட்டச் செயலாளர் – கரூர் (திமுக), 2018 – தற்போது வரை
முன்னாள் பொறுப்புகள்
- மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் அமைச்சர் (திமுக) – 2021 முதல் 2023 வரை
- போக்குவரத்து துறை அமைச்சர் (அ.தி.மு.க) – 2011 முதல் 2015 வரை
- சட்டமன்ற உறுப்பினர் – அரவக்குறிச்சி (திமுக) – 2019 முதல் 2021 வரை
- சட்டமன்ற உறுப்பினர் – அரவக்குறிச்சி (அ.தி.மு.க) – 2016 முதல் 2017 வரை
- சட்டமன்ற உறுப்பினர் – கரூர் (அ.தி.மு.க) – 2006 முதல் 2016 வரை
கரூரின் வளர்ச்சிக்கான பங்களிப்பு
கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், திமுக மாவட்டச்செயலாளராகவும், திரு வே. செந்தில் பாலாஜி பல்வேறு மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:
- சாலைப்பிணைப்பு மற்றும் கிராமப்புற போக்குவரத்து வசதிகளின் விரிவாக்கம்
- குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வசதிகளை மேம்படுத்தல்
- பள்ளி மற்றும் கல்வி நிறுவன கட்டிடங்கள், வசதிகளை மேம்படுத்தல்
- சுகாதார மையங்கள் நவீனமயமாக்கம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துதல்
- இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள்
- பெண்கள் நலன் மற்றும் சுயஉதவிக்குழு (SHG) மேம்பாட்டு நடவடிக்கைகள்
தலைமைதுவ நோக்கம்
திரு வே. செந்தில் பாலாஜி அவர்களின் தலைமை,மக்களிடம் நெருக்கமாக இருக்கக்கூடிய பண்பு பரவலாக அறியப்படுகிறது. பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து, அவர்கள் பிரச்சனைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்கும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அவரின் தலைமை மக்கள் வளர்ச்சியும், கிராமப்புற மேம்பாடு, பொது நிர்வாகத்தில் தெளிவும் பொறுப்பும் முக்கியக் கோடுகளாக உள்ளது.
மக்கள் தொடர்பு
கரூர் மக்களுடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருப்பதன் மூலம், திரு செந்தில் பாலாஜி அவர்கள் மக்களுக்கு எப்போதும் எளிதில் அணுகக்கூடிய தலைவராக உள்ளார். திடீர்ஆய்வுகள், தொகுதி மதிப்பீட்டு கூட்டங்கள் மற்றும் புகார் தீர்வு அமர்வுகள் வழியாக அவர் பொதுமக்களுடன் நேரடி தொடர்பை நிலைநிறுத்தி வருகிறார். இவையெல்லாம், ஆட்சி மற்றும் வளர்ச்சி குறித்து அவரது உறுதியான பார்வையை பிரதிபலிக்கின்றன.
குடும்ப பின்னணி
திரு செந்தில் பாலாஜி அவர்கள் திருமதி மேகலா செந்தில் பாலாஜி அவர்களை வாழ்க்கை துணையாகக் கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். குடும்பத்தை நேசிக்கும் நற்பண்புள்ள ஒருவராகவும், அனுபவமிக்க பொதுசேவகராகவும், தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் செயல்பட்டு வருகிறார்.