
புகைப்படங்கள்




16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பெரும் பயனடையும் வகையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிதாக கட்டியுள்ள ‘கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லம்’ கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் இ.ஆ.ப., TNGEA மாவட்ட தலைவர் திரு. எம்.எஸ். அன்பழகன், மாவட்ட செயலாளர் திரு. பொன். ஜெயராம், TNGEA மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.




தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது என தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, இன்று, நம் மாநில வளர்ச்சிக்கு தேவையான கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.




கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 2, பெரிய குளத்துப்பாளையத்தில், புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள் மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 11, பாலம்மாள்புரம் ஐந்து ரோடு பகுதியில், புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது..இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்..




கோவைக்கு மேலும் ஒரு பெருமையாக, கோவை, காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கவிருக்கும் நிலையில், இன்று, செம்மொழி பூங்காவில் நடைபெறும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு. கே. என். நேரு அவர்களுடன் ஆய்வு செய்த போது..




நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரூ. 49 லட்சம் மதிப்பில் மொத்த பரிசுத் தொகையுடன், நேற்று முதல் டிசம்பர் 28 வரை, கரூர் மாவட்டத்தில், கபடி, சிலம்பம், சதுரங்கம், கைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, சைக்கிள் ரேஸ், ஸ்கேட்டிங், மராத்தான் மற்றும் கிரிக்கெட் என தொடர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இன்று, நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துக் கொள்ள, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், ரூ. 7,20,000 மொத்த பரிசுத்தொகை மற்றும் வெற்றிக் கோப்பைக்களுக்கான ஆண்களுக்கான சிலம்பப் போட்டியை துவக்கி வைத்த போது..




கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், நாளைய நமது வரலாற்றை வரைந்திட போகும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரூ. 49 லட்சம் மதிப்பில் மொத்த பரிசுத் தொகையுடன், இன்று முதல் டிசம்பர் 28 வரை, கரூர் மாவட்டத்தில், கபடி, சிலம்பம், சதுரங்கம், கைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, சைக்கிள் ரேஸ், ஸ்கேட்டிங், மராத்தான் மற்றும் கிரிக்கெட் என தொடர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துக் கொள்ள, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், ரூ. 7,20,000 மொத்த பரிசுத்தொகை மற்றும் வெற்றிக் கோப்பைக்களுக்கான பெண்களுக்கான சிலம்பப் போட்டியை துவக்கி வைத்த போது..