புகைப்படங்கள்

நேற்றிரவு முதல் கேட்ட அழுகைகளாலும் அலறல்களாலும் கனத்தும் களைத்தும் போயிருக்கிறது மனம்.. மலரும் முன்பே உதிர்ந்த பிஞ்சுக் குழந்தைகளின் முகம் பார்த்திட அஞ்சியது கண்கள்.. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு இரங்கலையும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று கரூரில் நடைபெற்ற எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் நள்ளிரவே நேரில் வந்து ஆறுதல் கூறி, காயம்பட்டவர்கள் பூரண குணமடைய அனைத்து மருத்துவ ஏற்பாடுகளும் செய்துக் கொடுத்து உறுதுணையாக நிற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், இன்று காலை கரூருக்கு வந்து, இந்த துயர்மிகு சம்பவத்தில் உயிரிழந்தோர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கரூர் மாவட்ட மக்களின் சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். இந்த செய்தியறிந்து, கரூர் வந்து, நேற்றிரவு முதல் உறுதுணையாக துணை நிற்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் துடைக்கும் முயற்சியில் இரவு பகல் பார்க்காமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், என்னுடனே உடன் நின்று களப்பணியாற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். கரூரில் நடைபெற்ற, காலத்திற்கும் மறக்க இயலாத இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களது குடும்பத்தில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன் என உறுதியளிக்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக துணை பொதுச் செயலாளர், மாண்புமிகு மக்களைவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள், கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார்கள்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில், மாவட்ட, மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், இன்று கரூர் ஆர்த்தி ஹோட்டல், அழகம்மை மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது..
இந்நிகழ்வில் கழக இளைஞரணி துணைச் செய­லா­ளர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர், சகோதரர் திரு. கே. இ. பிர­காஷ் சிறப்புரையாற்ற, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக இளைஞரணி சார்பில், மாவட்ட, மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், இன்று நாமக்கல் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள இனமான பேராசிரியர் அரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக இளைஞரணி துணைச் செய­லா­ளர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர், சகோதரர் திரு. கே. இ. பிர­காஷ், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர் சகோதரர் திரு. கே.ஆர்.என். இராஜேஷ்குமார் சிறப்புரையாற்ற, மாண்புமிகு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் திரு. பெ. ராமலிங்கம், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் தம்பி திரு. சி. ஆனந்தகுமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தம்பி திரு. சி. விஷ்வநாத், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தலைநிமிர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி, தோகைமலை (முன்னாள் அதிமுக) ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளர் திரு. பவுன் தங்கவேல் அவர்கள் இன்று தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

மாநிலம் முன்னேற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் வடக்கு ஒன்றியம் புஞ்சை கடம்பன்குறிச்சி ஊராட்சி, அதிமுகவை சேர்ந்த 44 நபர்கள் மற்றும் பாமக கட்சியைச் சேர்ந்த 11 நபர்கள் தங்களை இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெறவிருக்கும், கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா குறித்தான ஆலோசனை க் கூட்டம் இன்று கரூரில் நடைபெற்றது.

#உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் மாநகராட்சி, காந்திகிராமம் உழவர் சந்தை அருகில் நடைபெற்ற சிறப்பு முகாமில், வார்டு 39ஐ சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட போது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், நாளை கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் நோக்கில் உழைத்திடும் இளைஞர்களின் எழுச்சி நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் கபடி போட்டியை இன்று கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பார்வையிட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளித்த போது. கடந்த இரு நாட்களாக நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

Scroll to Top