
புகைப்படங்கள்


தொழில் முனைவோர்களின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கைத்தறித் துறை சார்பாக, கரூர் சட்டமன்ற தொகுதி, வடிவேல்நகர், வேலுச்சாமிபுரம் தியாகி குமரன் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரத்தை, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் திரு.ஆர். காந்தி அவர்களுடன் இணைந்து இன்று பயன்பாட்டுக்கு துவக்கி வைத்த போது.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள, கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் திரு.ஆர். காந்தி அவர்களை இன்று வரவேற்றபோது.




கரூரில் இன்று நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், கொட்டும் மழையிலும் கொள்கைப் பிடிப்போடு, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையையும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் எழுச்சியுரையும் கேட்டு கூடியிருந்த, கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவருக்கும், உங்களது குடும்பத்தில் ஒருவனான எனது அளவற்ற அன்பையும், நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.



கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இன்று கரூரில் நடைபெற்ற, கழகத்தின் கொள்கை திருவிழாவாம் கழக முப்பெரும் விழாவில் வாழ்த்துரை வழங்கிய கழகப் பொருளாளர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர் அண்ணன் திரு. டி.ஆர். பாலு அவர்களுக்கும், கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. கே. என். நேரு அவர்களுக்கும், கழக துணைப் பொதுச் செயலாளர்கள், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. ஐ. பெரியசாமி அவர்களுக்கும், மாண்புமிகு மக்களவை உறுப்பினர் அண்ணன் திரு. ஆ. ராசா அவர்களுக்கும், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர், அண்ணன் திரு. திருச்சி சிவா அவர்களுக்கும், மாண்புமிகு மக்களவை உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் திரு. அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கும், கழகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு நற்சான்றும் பணமுடிப்பும் பெற்ற நிர்வாகிகளுக்கும், விழாவில் கலந்துக் கொண்ட மாநில – மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



கரூரில் இன்று நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, வீர வாளும் நினைவுப் பரிசும் வழங்கிய பொன்னான தருணத்தில்.



இன்று கரூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், கழகத் தலைவர், சமத்துவமும் சமூகநீதியும் ஓங்கிட திராவிட மாடல் நல்லாட்சி புரிந்து மாநிலத்தை முன்னேற்றி செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, செங்கோலும் நினைவுப் பரிசும் வழங்கிய பொன்னான தருணத்தில்.







கழகத்தின் இரும்பு கோட்டையாம் கரூரில் இன்று நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால், பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பாக, முரசொலி செல்வம் விருது பெற்ற கழக முன்னத்தி ஏர்களுக்கும் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




கரூரில் இன்று நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் எழுச்சியுரையாற்றிய, கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நாளை நமக்கான வரலாற்றை வரைந்திடப் போகும் நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாகவும், கரூர் மாவட்ட மக்களின் சார்பாகவும் எனது கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து மகிழ்கிறேன்.




கழகத்தின் கொள்கை திருவிழாவாம், கழக முப்பெரும் விழாவிற்கு வருகை புரிந்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த போது.




கழகத்தின் கோட்டையாம் கரூரில் நடைபெற்ற, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தமிழ்நாட்டை காத்து நிற்கும் கோட்டையான திமுக தொடங்கப்பட்ட நாளை கொண்டாடும் கழக முப்பெரும் விழாவில், கழக முன்னோடிகளுக்கும் முன்னத்தி ஏர்களுக்கும் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றிய, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கரூர் மாவட்ட கழகத்தின் சார்பிலும், கரூர் மாவட்ட மக்களின் சார்பாகவும் எனது கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்.