
புகைப்படங்கள்

கரூரில் கழக உடன்பிறப்புகளின் அன்பு வெள்ளத்தில் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.








மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், இன்று, கரூர் கோடங்கிப்பட்டியில் நடைபெறும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை திருவிழாவாம் முப்பெரும் விழாவிற்காக தயாரான நிலையில் விழா அரங்கம்.

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனைகளை போற்றும் விழா. திக்கெட்டும் தேவை திராவிட மாடலென பறைசாற்றும் விழா. வெல்வோமே இருநூறு, படைப்போமே வரலாறு என சொல்லும் விழா. கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட படை வெல்லும் விழா. கழகத்தின் கொள்கை திருவிழாவாம் முப்பெரும் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

நாளை நடைபெறும் கழகத்தின் கொள்கை திருவிழாவாம், கழக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று வரவேற்ற நெகிழ்வான நேரத்தில்.

சுயமரியாதைச் சூரியன், பகுத்தறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதி பாதையிலே பயணிக்க உறுதியேற்போம்.



கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவிற்கான பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களுடன் இணைந்து, இன்று ஆய்வு செய்த பொழுது.



திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற புதன்கிழமை, கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழா நடைபெறும் திடலை, இப்போது ஆய்வு செய்த பொழுது.


பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கருர் சட்டமன்ற தொகுதி, ராமேஸ்வரப்பட்டியில் வாக்காளர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என உறுதிமொழி ஏற்ற போது.



கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவிற்கான பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் திரு. இ. பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் திரு. அர. சக்கரபாணி அவர்களுடன் இணைந்து, இன்று ஆய்வு செய்த பொழுது.




கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள, பேரறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றுக்கொண்ட போது..