புகைப்படங்கள்

‘பழைய எதிரிகள் – புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திராவிட முன்னேற்ற கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையை தொட்டு கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்’ – கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், கரூரில் வரும் செப் 17 அன்று நடைபெறும் கழக முப்பெரும் விழாவிற்காக விடுக்கும் அழைப்பு மடல்..

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 17 அன்று, கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவிற்கான பணிகளை மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் அண்ணன் திரு. சு. முத்துசாமி அவர்களுடன் இணைந்து, இன்று ஆய்வு செய்த பொழுது..

கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்து பார்வையிட, கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த, மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் அண்ணன் திரு. சு. முத்துசாமி அவர்களை இன்று வரவேற்ற போது..

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் பெருந்தகையின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள, பேரறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..

தமிழ்நாடு தலைநிமிர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் மாநகராட்சி, தான்தோன்றி மேற்கு பகுதி, 48வது வார்டை சேர்ந்த அதிமுகவினர், அக்கட்சியிலிருந்து விலகி, இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கரூரில் வருகின்ற செப்டம்பர் 17 அன்று நடைபெறவிருக்கும், தி.மு.க முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தான, கரூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம், இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மொஞ்சனூர் ஊராட்சி தொட்டம்பட்டியில் பகுதி நேர நூலகத்தை இன்று துவக்கி வைத்த போது. கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் பி.ஆர். இளங்கோ, உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அரசின் சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் மாநகராட்சி, வெங்கமேடு, முத்து மஹாலில் நடைபெற்ற சிறப்பு முகாமில், வார்டு 6 மற்றும் 10ஐ சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட போது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை போராட்ட தியாகி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய போராளி, அய்யா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளான இன்று, கரூர் கலைஞர் அறிவாலயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, மொஞ்சனூர் ஊராட்சி அருள்மிகு ஆவுடையிஸ்வரர், அருள்மிகு உமயவள்ளி, அருள்மிகு கரியகாளியம்மன், அருள்மிகு முத்துச்சாமி திருக்கோவில் திருப்பணிகளை பார்வையிட்ட போது.

Scroll to Top