புகைப்படங்கள்

விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 28, திருக்காம்புலியூர் மந்தை அருகே புதிய நியாய விலைக்கடை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

நெசவாளர்களின் நண்பர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 2, பெரியகுளத்துப்பாளையம் காயத்ரி நகரில், குடிநீர் வசதியுடன் புதிய சிண்டெக்ஸ் தொட்டியை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

ஓய்வறியா சூரியன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகராட்சி, மண்டலம் -1க்குட்பட்ட வாங்கப்பாளையம், குளத்துப்பாளையம் 2000 LPM x 40m Head திறந்த வெளி கிணறுக்கு நீரில் மூழ்கக்கூடிய பம்பு செட்டை வழங்கி இயக்குதல், சோதனை செய்தல், MV பேனல் மற்றும் 90HP மோட்டாரை மேலமாயனுரில் அமைத்தல், வாங்கல் குளத்துப்பாளையத்தில் வால்வுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திர. மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், 18வது கோவை விழாவினை, இன்று கோவை, கொடிசியா மைதானத்தில், கோவையின் பெருமையை கொண்டாடும் விதத்தில், வண்ணமயமான ஸ்கைடேன்ஸ் நிகழ்வுடன் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மேயர் திருமிகு. ரங்கநாயகி, கோவை கமிஷ்னர் திரு. சரவண சுந்தர் I.P.S.,கழக தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர். ஆர். மகேந்திரன், கோவை மாவட்ட தொழில்முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என நமக்கு அறிவுறுத்தி, அதற்கான சட்டப் போராட்டங்கள் நடத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், சகோதரர் திரு.கே. ஆர். என்.ராஜேஷ்குமார், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், சகோதரர் திரு. மா.மதிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்க,SIR குறித்தான நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இன்று நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 23ல், கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய கட்டிடங்களை அமைக்கும் பணிகளை இன்று துவக்கி வைத்த போது.இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்

மாநில நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், கழகம் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட Confederation of Indian Industry (CII), Young Indians, Indian women network, கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 85 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து, 2030 ஆண்டுக்குள், கரூர் மாவட்டத்தின் அனைத்து தொழில்களின் வணிக இலக்கு ரூபாய் 50,000 கோடியை அடைந்திடும் வகையில், ‘KARUR VISION 2030 – வளரும் கரூர்’ என்ற இலக்கை நோக்கிய நகர்வுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து சங்கங்கள் இணைந்து நடத்திய தொழில் மேம்பாட்டு கருத்தரங்கு, இன்று கரூர் அட்லஸ் அரங்கத்தில் துவக்கி வைக்கப்பட்டது .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கோவை தெற்கு மாவட்டதில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட BLA-2 & BDA நிர்வாகிகள் கலந்து கொள்ள, ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை, ஈச்சனாரி, செல்வம் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் அண்ணன் திரு. மு. கண்ணப்பன், மாண்புமிகு மக்களவை உறுப்பினர்கள் திரு. கணபதி. பி. ராஜ்குமார் மற்றும் திரு. கே. ஈஸ்வரசாமி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. தளபதி முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் உட்பட அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பங்குபெற்ற, 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணராயபுரம் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், சூர்யா திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மீ. தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. க. சிவகாமசுந்தரி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Scroll to Top