
புகைப்படங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், வருகின்ற 10/09/2025 அன்று, கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நாளை கிருஷ்ணராயபுரம் தொகுதி, வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.. பொதுமக்கள் பங்குபெற்று பயனடைய வேண்டுகிறேன்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சுதேசி கப்பலோட்டிய சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வாழ்வின் வழிகாட்டிகள், நம் திறமையின் திசைகாட்டிகளான ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

தமிழ் நிலத்தின் பெருமை காத்த தியாக சீலர், ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரின் அழியா புகழை போற்றுவோம்.

சமத்துவம் பெருகட்டும்.. சமூகநீதி ஓங்கட்டும்.. அனைவருக்கும் எனது மீலாதுன் நபி நன்னாள் வாழ்த்துகள்.



நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், கரூர் சட்டமன்ற தொகுதி கல்லுப்பாளையம், சோமூரில் அமைந்துள்ள, அருள்மிகு செல்லாண்டியம்மன், அருள்மிகு அன்னகாமாட்சியம்மன், அருள்மிகு கன்னிமார், அருள்மிகு மாசி பெரியசாமி, அருள்மிகு புக்கராண்டி கருப்பு, அருள்மிகு மதுரை வீரன், அருள்மிகு காத்தவராயன் கோவில் வீடு குடமுழுக்கு விழாவில் கலந்துக் கொண்ட போது.


அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டுமென்றும் என்ற உயர்ந்த நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் குப்புச்சிபாளையத்தில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர், அருள்மிகு ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலய குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட போது.








மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி செந்தில் பாலாஜி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் தொகுதி, கரூர் கிழக்கு ஒன்றியம், நெரூர் வடக்கு பகுதி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட போது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
