புகைப்படங்கள்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால், மக்களின் வீடுகளுக்கே அரசின் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் தொகுதி, திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், வார்டு 29 & 30ஐ சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட போது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பல்லாயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், இன்று நடைபெற்ற, தாந்தோணி கிழக்கு ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி நத்தமேடு அருள்மிகு பாண்டீஸ்வரர் சாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துக் கொண்ட போது.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், வருகின்ற செப்டம்பர் 17 அன்று, கரூர் கோடாங்கிபட்டியில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும், செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் விபரங்கள்.. கரூர் மாவட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள், நாளை கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருக்கும், கரூர், திருக்காம்புலியூர், அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இன்று துவக்கி வைத்த போது.

அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி உயர்வால், தமிழ்நாட்டில், திருப்பூர், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, ஒன்றிய அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இன்று திருப்பூரில், கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் திரு. திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் அண்ணன். திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. தங்கபாலு, மாண்புமிகு மக்களவை உறுப்பினர்கள் திரு. வெங்கடேசன் மற்றும் திரு. சுப்பராயன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு. ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுச் செயலாளர் திரு. முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் திரு. தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் திரு. ராமகிருட்டிணன், ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் திரு. அதியமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்முனைவோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரூரில் வருகின்ற செப்டம்பர் 17 அன்று நடைபெறவிருக்கும் கழகத்தின் கொள்கை திருவிழாவாம், தி.மு.க முப்பெரும் விழாவிற்கான பணிகளை இன்று, கரூர் கோடாங்கிபட்டியில் துவக்கி வைத்த போது.

தமிழ்நாடு தலை நிமிர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தேவையே என்று உணர்ந்து, இன்று, கரூர் கிழக்கு ஒன்றியம், சோமூர் ஊராட்சியை சேர்ந்த அதிமுக, பாமக, தவெக என மாற்றுக் கட்சியினர் 18 பேர், தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமை தான் தமிழ்நாட்டை உயர்த்தும் என்று உணர்ந்து, தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் திரு. முருகன் சுப்பையா, வடக்கு பகுதி செயலாளர் திரு. ஆனந்த் ல், மாவட்ட துணைச் செயலாளர் திரு. பெரியண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. துளசி மணி, பொதுக்குழு உறுப்பினர் திரு. ஹரிஹரன், மாவட்ட தொழில் சங்க துணைத் தலைவர் திரு. பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு. அருண், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. மனோஜ் ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. சுமதி, நகர மகளிர் அணி செயலாளர் திருமதி. தீபிகா, நகர மகளிரணி துணைச் செயலாளர்கள் திருமிகு. சந்தியா, திருமதி. கற்பகம், உள்ளிட்ட 21 பேர், இன்று தேமுதிகவில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்

மாநில வளர்ச்சியை 11.19 சதவீதமாக உயர்த்தி, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தங்களுக்கு தேவை என உணர்ந்து, கரூர் மேற்கு பகுதி தவெகவை சேர்ந்த 58 நபர்கள், இன்று தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.

Scroll to Top