புகைப்படங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் சுக்காலியூர், நவலடியான் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட BLA-2 & BDA நிர்வாகிகள் கலந்து கொள்ள, ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் இன்று கரூர் பிரேம் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு தலைநிமிர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, இன்று கரூர் மாநகராட்சி 42வது மற்றும் 48 வது வார்டு பகுதியைச் சார்ந்த அதிமுகவினர், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கரூர் மேற்கு பகுதி 44வது வார்டு தவெக கட்சியை சேர்ந்த, வட்ட கழக செயலாளர் திரு. நவநீதகிருஷ்ணன், வார்டு துணைச் செயலாளர் திரு. வீராசாமி, வார்டு பிரதிநிதி திரு. தினகரன் உட்பட 25 நபர்கள் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, அதிமுக முன்னாள் கோவை மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சொக்கம்புதூர் திரு. செந்தில் அவர்கள், இன்று தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

தமிழ்நாடு தலைநிமிர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகர் மாவட்டதில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட BLA-2 & BDA நிர்வாகிகள் கலந்து கொள்ள, ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை, வரதராஜபுரம், ஶ்ரீ சாய் விவாகா மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கழக சொத்துப் பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் அண்ணன் திரு. பொங்கலூர் நா. பழனிச்சாமி அவர்கள், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் திரு. துரை. செந்தமிழ் செல்வன், கோவை மேயர் திருமிகு. ரங்கநாயகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்டதில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட BLA-2 & BDA நிர்வாகிகள் கலந்து கொள்ள, ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை தொண்டாமுத்தூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், வடக்கு மாவட்ட செயலாளர் திரு. அ.ரவி, கோவை மேயர் திருமிகு. ரங்கநாயகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் போற்றிடும் உன்னத தலைவர், ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவில், அவரின் தொண்டுகளையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ் மண் தந்த உன்னத தலைவர், ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று, கோவை, பள்ளபாளையம் பேரூராட்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.

Scroll to Top