
புகைப்படங்கள்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறிய படி, களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளான நம்மை வெல்ல, இங்கு எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய நேரம். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என கழகத்தினர் அனைவரும், கருப்பு சிவப்பு கரை கொண்ட வேட்டி கட்டிய ஈட்டியென புயலாய் செயலாற்ற வேண்டிய தருணம். நலத்திட்ட நாயகரின் நல்லாட்சியின் மகத்துவத்தை சொல்வோம்.. நமது ஒவ்வொருவர் வாக்குச்சாவடியிலும் வெல்வோம். ஏழாவது முறையாக வெற்றி வாகை சூடி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான நல்லாட்சி தொடரச் செய்து வரலாறு படைப்போம்.








நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட BLA-2 & BDA நிர்வாகிகள் கலந்து கொள்ள, ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் இன்று கரூர் பிரேம் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் சுக்காலியூர், நவலடியான் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட போது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், தமிழ்நாட்டில் இருந்து உலக தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் உன்னத நோக்கில் அயராது உழைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன், இன்று கரூரில் தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் நடத்திடும், 15வது தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளை துவக்கி வைத்த போது.

ஓய்வறியா சூரியன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, மண்மங்கலம் ஊராட்சி, மண்மங்கலம் பிசி குடியிருப்பு பகுதியில், தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை இன்று துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி, தவுட்டுப்பாளையம் AC நகர் – செல்வம் நகர் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.




திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி, குப்புச்சிபாளையம் பகவதி அம்மன் கோவில் பகுதியில், புதிய பகுதி நேர நியாய விலை கடையை இன்று திறந்து வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.




நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி, குப்புச்சிபாளையம் கடைவீதி பகுதியில், புதிய நியாய விலை கடையை இன்று திறந்து வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.




மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, நன்னியூர் ஊராட்சி, என்.புதூர் பகவதியம்மன் கோவில் பகுதியில், புதிய சமுதாயக் கூடத்தை இன்று திறந்து வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.




எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி, கடம்பங்குறிச்சி ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில், புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணியையும், புதிய மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.