
புகைப்படங்கள்

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, அன்பு நகரில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது.

தமிழ்நாடு தலை நிமிர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் கிழக்கு ஒன்றியம், ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், இன்று தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.








சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, இன்று சந்தித்து நலம் விசாரித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கிய போது.




மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாசிகளுடன், உலக தரத்தில் விளையாட்டு வீரர்களை, தமிழகத்தில் இருந்து உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத முனைப்பில் அயராது உழைத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், கரூர் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான குடியரசு தின தடகளப் போட்டிகளின் பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு, மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கிய போது.




நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், கோவை கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை, 1791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் மிக நீளமான (10.10 கிலோ மீட்டர்) நான்கு வழித்தட, ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை, இன்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்.


கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 126.12 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பீட்டில், முதற்கட்டமாக 81.40 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்கநகை பூங்கா பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு கோவை மாவட்ட தங்க நகை தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர்கள் மற்றும் பணியாளர்களின் சார்பாக பாதம் பணிந்த நன்றிகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

தொழில் முனைவோர்களின் நம்பிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று, கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில், “உலக புத்தொழில் மாநாடு 2025”-யைத் தொடங்கி வைத்து, தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை-2025 (Tamil Nadu Startup EcoSystem Report 2025) வெளியிட்டார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, கோவை மாவட்ட மக்களின் சார்பாகவும், தொழில் முனைவோர்கள் சார்பாகவும், எனது கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து மகிழ்கிறேன்.

இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48′ திட்டம் மூலமாக பல லட்சம் உயிர்களை காப்பாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று கோவை அரசினர் கலைக் கல்லூரியில், கோயம்புத்தூர் சாலைப்பாதுகாப்பு மாதிரி நகர் திட்டம், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் மற்றும் உயிர் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்வில், “நான் உயிர் காவலன் உறுதிமொழி” ஏற்கப்பட்டது. மக்கள் நலன் காக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, கோவை மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்.

அரசு நிகழ்வுகளில் தலைமையேற்கவும், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும், இன்று கோவைக்கு வருகை புரிந்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை வரவேற்ற பொன்னான தருணத்தில்.

தொழில் முனைவோர்களின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், நாளை கோவையில், ரூ. 126 கோடி மதிப்பிலான தங்க நகை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிடும் விழா அரங்கை, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அண்ணன் திரு. தா.மோ. அன்பரசன் அவர்களுடன் இன்று ஆய்வு செய்த போது.